இனிமேல் சென்ட்ரல் ரயில் நிலையம் இல்லங்க; பேரு நேத்து நைட்டே மாறி போச்சு!

 

இனிமேல் சென்ட்ரல் ரயில் நிலையம் இல்லங்க; பேரு நேத்து நைட்டே மாறி போச்சு!

 மோடியின் அறிவிப்பையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

சென்னை: மோடியின் அறிவிப்பையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடடம்

train

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் கருதப்படுகிறது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இது  சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகவும் உள்ளது.  சென்னைக்கு காலடி எடுத்து வைக்கும் பெரும்பாலானோருக்கு இந்த ரயில் நிலையம் ஒரு வரப்பிரசாதம் தான்.

சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றம் 

chennai

இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததோடு, எம்ஜிஆரின் புகழினையும் குறித்துப் பேசினார். அதன்படி,  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெயர் மாற்றத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையும் வாசிக்க: கள்ளகாதலால் நடந்த விபரீதம்: இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்; சேலத்தில் பரபரப்பு!