இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார்: சீமான் புகழாரம்!

 

இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார்: சீமான் புகழாரம்!

தமிழகத்தில் இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான், ஜெயலலிதா இருந்தபோது, அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண்மகன் என்றும் கூறினார். மேலும், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் ஹீரோக்கள் இல்லை, ஜீரோக்கள் என்று விமர்சித்த சீமான், தமிழகத்தில் இனிமேல் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்று கூறிய சீமான், ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் அவரை வைத்து மூன்று படங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

சர்கார் திரைப்பட விவகாரத்தின் போது, விஜய், ‘நான் ஜெயலலிதா மீது தான் மிகவும் பற்றுகொண்டவன்’ என்று பேசியதாகக் கூறிய சீமான், சர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடலையும் கிண்டல் செய்தார். விஜய் தன்னுடைய படத்தில் நடிக்கமாட்டார் என்றாலும் தான் பேசுவதையே திரைப்படங்களில் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

இதையடுத்து விஜய் பற்றி அவர் கூறிய கருத்துக்களால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஷ்டேக் ஒன்றில் தொடர்ந்து பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.