இனிமேல் சந்திரன் இல்லை! பெயரை மாற்றி கொண்ட கயல் திரைப்பட கதாநாயகன்!! 

 

இனிமேல் சந்திரன் இல்லை! பெயரை மாற்றி கொண்ட கயல் திரைப்பட கதாநாயகன்!! 

கயல் படம் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன் தனது பெயரை சந்திரமௌலி என மாற்றிக் கொண்டிருக்கிறார்

சென்னை: கயல் படம் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன் தனது பெயரை சந்திரமௌலி என மாற்றிக் கொண்டிருக்கிறார். 

பிரபு சாலமனின் இயக்கத்தில் கதநாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து தனது பெயரை ‘கயல்’ சந்திரன் என மாற்றிக்கொண்டார். அதைத்தொடர்ந்து நான் செய்த குறும்பு மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கயல் சந்திரன் தனது பெயரை மாற்றி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்,அதில்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விப்பேன்.

இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.