இனிமேல் உங்கள் சைக்கிளுடன் ரயிலில் பயணம் செய்யலாம்: சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு!

 

இனிமேல் உங்கள் சைக்கிளுடன் ரயிலில் பயணம் செய்யலாம்: சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். அதன் கட்டணம் மட்டுமே மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது சலுகைகள் கொடுத்து மெட்ரோ நிர்வாகம் அசத்தி வருகிறது. ஆரம்பத்திலிருந்த பயணிகளின் எண்ணிக்கையை விட இப்போது அதிகமாகவே உள்ளது. சமீபத்தில் மெட்ரோ அறிமுகப் படுத்திய வாடகை கார் சேவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் வாகனம் இல்லா போக்குவரத்து திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிர்வாகம், பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. சைக்கிளுடன் பயணிப்பவர்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத  வண்ணம் சிறிய சைக்கிளைப் பயன்படுத்துமாறும், முதல் வகுப்பில் பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ttn

இந்த திட்டம் வாகனங்கள் பயன்பாட்டைக் குறைத்து, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும் பயண நேரத்தைக் குறைக்கிறது என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எந்த மெட்ரோ சேவையிலும் இல்லாத இந்த திட்டத்தைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.