இனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா?

 

இனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா?

நீதிமன்ற உத்தரவின் பேரில், டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவின் பேரில், டிக் டோக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டோக் . இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தை பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

tik tok

பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டோக்  செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டோக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

sc

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதனிடையே, டிக் டோக்  செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டிக் டோக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது.

tik tok

இந்நிலையில்,  டிக் டோக் செயலியை  பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதன் காரணமாக  டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.

இதையும் வாசிக்க: எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது: பிரபல நடிகை பரபரப்பு புகார்!