இனிமேல் ஈஸியா பட்டா மாறுதல் செய்யலாம்.. அதுவும் வீட்டிலிருந்த படியே : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

 

இனிமேல் ஈஸியா பட்டா மாறுதல் செய்யலாம்.. அதுவும் வீட்டிலிருந்த படியே : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

இதற்காக தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று வெகு நேரம் காத்திருந்து அந்த நடைமுறையைச் செய்து முடிக்க வேண்டும்.

ஒருவர் பேரில் இருக்கும் சொத்தை வேறொருவர் வாங்கினாலோ அல்லது வேறொருவருக்குக் கொடுத்தாலோ உரிமையாளர் பேரில் இருக்கும் பட்டாவை கிரையம் செய்பவர்கள் பேரில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்காக தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று வெகு நேரம் காத்திருந்து அந்த நடைமுறையைச் செய்து முடிக்க வேண்டும். சில பேர் அதற்கு கடினப்பட்டுக் கொண்டே பட்டாவை மாற்றாமலே வைத்திருப்பர். இவ்வாறு இருக்கும் நடைமுறைகளில் மக்களின் சிரமத்தை அறிந்த அரசு, ஆன்லைன் மூலம் பட்டா விண்ணப்பிக்கும் மென்பொருள் சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால், அதிலும் தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்து வந்தன. 

ttn

இந்நிலையில், மக்களின் சேவையை இன்னும் எளிதாக்க வீட்டிலிருந்த படியே பட்டாவை மாற்றிக்கொள்ளத் தமிழக அரசு புது மென்பொருளை உருவாக்கியுள்ளது. அந்த மென்பொருளில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு உரிய பதிலை அளித்து அந்த நடைமுறையை முடிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த நடைமுறை சரியாக முடிந்து விட்டால், இணையத்தில் பட்டா மாறுதல் தானாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். 

ttn

அது நடைமுறை முடிந்து விட்டதா என்பதை நாம் அறிந்து கொள்ள கிரையம் முடித்தவரின் எண்ணுக்கும் கிரையம் பெற்றவர்களின் எண்ணுக்கும் பட்டா மாறுதல் பற்றிய விவரங்கள் பற்றிய குறுந்தகவல் அனுப்பப்படும்.மேலும், அந்த நடைமுறையில் மின்னஞ்சல் கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கும் அந்த தகவல் அனுப்பப்படும். இந்த மென்பொருள் செயல்படுத்தப்பட்டது குறித்த அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்திருக்கிறார்.