இனிப்பான கும்மாயம் செய்வது எப்படி?

 

இனிப்பான கும்மாயம் செய்வது எப்படி?

இனிப்பான கும்மாயம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இனிப்பான கும்மாயம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

உளுந்தப் பருப்பு : 2 உழக்கு 
பாசிப்பருப்பு        : 1 உழக்கு 
பச்சரிசி                 : 1/2 உழக்கு 
வெல்லம்               : 1/2 உழக்கு 
நெய்                       : 150 கிராம் 

செய்முறை: 

இரண்டு பருப்புகளையும், அரிசியையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து, மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு வெல்லத்தைப் போடி செய்து, 3 டம்ளர் தண்ணிரில் கரைத்து சுத்தம் செய்து கொதிக்க வைக்கவும். கடைசியாக இதில் மாவை சிறுது சிறிதாக சேர்த்து கிளறி நெய்யை சேர்த்து கும்மாயம் வெந்ததும் இறக்கவும்.