இந்த 5 பழங்களை சாப்பிட்டீங்கன்னா வழுக்கையிலிருந்து கண்டிப்பாக தப்பிக்கலாம்!?

 

இந்த 5 பழங்களை சாப்பிட்டீங்கன்னா வழுக்கையிலிருந்து கண்டிப்பாக தப்பிக்கலாம்!?

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை உண்டால் தலையில் வழுக்கை விழாது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை உண்டால் தலையில் வழுக்கை விழாது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

hair

சிலருக்கு முடி கொட்டும் பிரச்னை பெரும் தலைவலியாக இருக்கும். அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். முடி உதிர்வதைப் போக்க சிலர் ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா என்று எது செய்தும் பலனில்லாமல் சோகத்தில் மூழ்கி கிடப்பார்கள். இன்னும் சிலருக்கு தலையில் வழுக்கை விழும் அளவிற்கு முடி கொட்டும். அதற்கு மரபணு பிரச்னை, மனஅழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படும். கவலை வேண்டாம் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள்   மூலமாகவே வழுக்கையிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். 

இதுகுறித்து கூறியுள்ள லண்டன் மருத்துவர் பஷர், அதிக ஊட்டச்சத்து நிறைந்த சில பழங்களை  எடுத்துக்கொண்டால் வழுக்கை ஏற்படாது என்று கூறியுள்ளதோடு, சில பழவகைகளையும் பரிந்துரைத்துள்ளார். 

பப்பாளி :

papaya

பப்பாளியில் 235 மில்லி கிராம் வைட்டமின் சி  இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பப்பாளியில் முடி வளர்ச்சிகளான சத்துக்கள்  நிறைந்துள்ளது

அன்னாசி பழம் :  

pineapple

வைட்டமின் சி,  மெக்னீசியம், வைட்டமின் பி6  உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது அன்னாசி பழம். இது சிதைந்த வேர்க்கால்களை சரிசெய்து முடி வளர்ச்சியைக் கூட்டுகிறது. 

பீச் பழம் :  

peach

பீச் பழத்தில் உள்ள வைட்டமின்  சி, ஏ உள்ளது. இதை நாம் ஜூஸாக அல்லது அரைத்து தலையில் பூசி வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

கிவி பழம் :

kiwi

கிவி பழத்தில் வைட்டமின்கள்   சி, ஏ, இ  மற்றும் கே  ஆகியவை நிறைந்துள்ளன. இது  ரத்தஓட்டத்தை சீராக்கி வேர்க்கால்களில் கொண்டு சென்று கருகரு கூந்தல் வளர உதவுகிறது. 

ஆப்பிள் :

apple

ஆப்பில் பழத்தில்  வைட்டமின்கள்   சி, ஏ, ஆகியவை உள்ளது. பொதுவாக ஆப்பிள்  தலைமுடி வேர்களில் புதிய முடியை வளர செய்ய உதவும். மேலும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதாலோ அல்லது தலையில் அரைத்து பூசினாலோ பொடுகு தொல்லை நீங்கும்.