இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் ரூ.7.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 2,390 புள்ளிகள் உயர்ந்தது…

 

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் ரூ.7.66 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 2,390 புள்ளிகள் உயர்ந்தது…

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 2,390 புள்ளிகள் உயர்ந்தது.

மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. அதனால் இந்த வாரம் பங்கு வர்ததகம் 4 தினங்கள் மட்டுமே நடந்தது. கடந்த 4 வர்ததக தினங்களும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சோதனையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் உலக லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

கொரோனா வைரஸ்

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.129.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.7.66 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தின் முடிவில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புள்ளிகள் 2,390.42 புள்ளிகள் உயர்ந்து 33,717.62 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 705.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,859.90 புள்ளிகளில் முடிவுற்றது.