இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு….

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு….

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். சீனாவில் பரவி வரும் கொரோனாவைரஸ் தாக்கம் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரமும் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணியாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய்

கடந்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி இந்த வாரம் வெளியிடுகிறது. மொத்த விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு  கடந்த ஜனவரியில் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை. கடந்த டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்தது.

வோடாபோன் ஐடியா

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, 15 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது வோடாபோன் ஐடியா நிறுவனம்தான். சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் வெளிவரும் எந்தவொரு முடிவும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

இதுதவிர, இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக விளங்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.