இந்த வாரம் பங்குச் சந்தை ஒரு வேளை இப்படி இருக்குமோ? இல்ல அப்படி இருக்குமோ?

 

இந்த வாரம் பங்குச் சந்தை ஒரு வேளை இப்படி இருக்குமோ? இல்ல அப்படி இருக்குமோ?

சென்ற வாரம் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில் வரும் வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்த வார வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் பங்கு முன்பேர வர்த்தக கணக்குகள் முடிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்வர். பருவமழை நிலவரம் இதுவரை சாதகமாக இல்லை. வரும் நாட்களில் பருவமழை நிலவரத்தை பொறுத்து பங்குச் சந்தைகள் வினையாற்றும்.

பங்குச் சந்தை

மே மாத நிதிப்பற்றாக்குறை, தொழில்துறை உற்பத்தி ஆகிய புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளிவர உள்ளது. அது குறித்த எதிர்பார்ப்புகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜி20 நாடுகளின் மாநாடு இந்த வாரம் நடைபெறுகிறது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் உச்சகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் அந்த மாநாட்டில் சந்தித்து பேச உள்ளார்கள். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரத்தை அமெரிக்கா வெளியிடுகிறது. மேலும், மே மாத வீடுகள் விற்பனை, சரக்கு வர்த்தக நிலவரம் ஆகியவை அமெரிக்காவில் வெளியாகிறது. பேங்க் ஆப் ஜப்பான்  சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது. இவை சர்வதேச பங்குச் சந்தையில தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும்.

பங்கு வர்த்தகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா-ஈரான் இடையிலான பிரச்சினை, அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவை இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தாழ்வை நிர்ணயம் செய்யும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர்.