இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.1.81 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…..சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ச்சி…

 

இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.1.81 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…..சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ச்சி…

தொடர்ந்து 2வாரங்களாக ஏற்றத்தை சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இந்த வாரம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 262 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கச்சா முன்பேர வர்த்தக சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை பூஜ்ய டாலருக்கும் கீழே சென்றது. கச்சா எண்ணெய் வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை எதிர்மறையாக சென்றுள்ளது. இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற தொடங்கினர். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போன்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வார பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் 24ம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.73 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் முதலீட்டளார்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.81 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம்

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 261.50 புள்ளிகள் சரிந்து 31,327.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 112.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,154.40 புள்ளிகளில் முடிவுற்றது.