இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க?

 

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் கதாநாயகன் காளையா, கரடியா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்றாங்க?

ஆர்.சி.இ.பி., நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்தியா உள்பட 16 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் நாளை தாய்லாந்தில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, கடந்த 7 ஆண்டுகளாக பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.)  தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் எச்சரிக்கை  செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை வெளியாகும் முடிவுகள் இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு

இந்த வாரம் அப்பல்லோ டயர்ஸ், டைட்டன், எச்.டி.எப்.சி. நிறுவனம், தாபர், ஜின்டால் ஸ்டீல் மற்றும் டெக்மகிந்திரா உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவர உள்ளது. இதுவும் பங்குச் சந்தையின் போக்கினை முடிவு முக்கிய காரணியாக இருக்கும். இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டை பொறுத்தும் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இதுதவிர இந்த வாரம் அமெரிக்காவின் செப்டம்பர் மாத ஆலை ஆர்டர் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இந்த வாரம் தங்களது பி.எம்.ஐ. புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இது போன்ற சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.