இந்த ராசிக்கு முழு அதிர்ஷ்டம் உண்டு!

 

இந்த ராசிக்கு முழு அதிர்ஷ்டம் உண்டு!

அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மூலமாக இலாபம் அடைவீர்கள்

இன்றைய ராசிபலன்
20-7-19 (சனிக்கிழமை )
ராகுகாலம்
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்
பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
நல்லநேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
சந்திராஷ்டமம்
பூசம்
பரிகாரம்
தயிர்

மேஷம்
வருமானம் அதிகரிக்கும் நாள். கொடுக்கப்பட்ட கடன்கள் சுலபமாக வசூலாகி பொருளாதார நிலை சீரடையும். நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் பணத்தை  எல்லாம் மறக்காமல் இன்று கேட்டு வையுங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். 

ரிஷபம்
அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மூலமாக இலாபம் அடைவீர்கள். புகழ் ஓங்கும். வியாபாரம் கைகொடுக்கும். இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்
தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். புனித பயணங்களில் ஆர்வம் மேலோங்கும். இன்று நீங்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும்.

கடகம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது உத்தமம். நம்பிக்கை மிக்க நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பார்கள். 

சிம்மம்
தொழிலில் வரும் இலாபத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இனிய பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். இன்று புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி
மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும்.

துலாம்
எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.  பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மகரம்
கல்வியில் தடைகள் ஏற்படும். திருமணம் தாமதமாகும். உறவுகள், நண்பர்களின் உதவி கிடைக்காது. திடீர் மாற்றங்களும், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.  எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மீனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்