இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்…உஷார்!

 

இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இன்று சிக்கல் தான்…உஷார்!

அலுவலகத்தில் சற்றே பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக அமையும். இன்று உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

இன்று (12-12-2019) வியாழக்கிழமை

நல்ல நேரம்        : காலை 10.45மணி முதல் 11.45 வரை
ராகு காலம்        : பிற்பகல் 01.30மணி முதல் 3.00வரை
எமகண்டம்        : காலை 06.00 மணி முதல் 7.30வரை 
 

மேஷம் 
மற்றவர்களின் நன்மைக்காக உங்களின் திறமையை உபயோகப்படுத்துங்கள். புதிய வருமான வாய்ப்புகள் கைகூடும். இன்று உங்கள் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் உங்கள் பொன்னான நேரம் செலவழியும்.அலுவலகத்தில் சற்றே பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக அமையும். இன்று உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் 
இன்று உங்கள் வாழ்க்கைத் துணையை மன்னிக்கும் நாளாக அமையும். உங்களின் எண்ணங்களை அவசியம் இருந்தால் மட்டுமே வெளிப்படுத்துங்கள்.இன்று எதிர்பார்த்த பணவரவு உண்டு. அதற்கேற்ற செலவும் இருக்கும். யதார்த்ததையும், நிதானத்தையும் கடைபிடியுங்கள். காலை நேரத்தில் சிரமம் ஏற்பட்டு பின் சமாளிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம்
இன்று இனிமையான நாளாக அமையும். அலுவலகத்தில் முக்கியமான பணி மாற்றம் ஏற்படும். பயணத்தால் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுங்கள். வீண் விவாதத்தை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 9

கடகம் 
இன்று உங்களுக்கு விருப்பமான பல விஷயங்களை எதிர்பார்த்த படியே நடக்கும். உங்கள் திறமையால் அனைவரின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. சிரிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். 
அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் 
இன்று உங்கள் நேரங்களை குடும்பத்தினருடன் செலவிட முயற்சி செய்வீர்கள்.  உடல் நலனில் அக்கறை செலுத்தும் நாள். செலவினங்கள் அதிகப்படுத்தும் நாளாக அமையும். பேச்சிலும் , வாக்குறுதிகளிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இது.
அதிர்ஷ்ட எண்: 2

கன்னி 
உறவினர்கள் சந்திப்பு நிகழும் நாள். அன்பு பெருக்கெடுக்கும் நாள். இன்று தொழிலில் அல்லது அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய மாற்றம் நிகழும். வாழ்க்கை துணையின் இனிமையான வார்த்தைகள் இதமளிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9

துலாம் 
உங்களின் நீண்டகால உழைப்பிற்கு இன்று உற்சாகம் கிடைக்கப் போகும் நாள். இதே உற்சாகம் கிடைக்க எப்போதும் உழைப்பை தொடர்ந்திடுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  பணவிஷயத்தில் நிதானம் அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் 
குழப்பமான சூழ்நிலையில் உதவி செய்த உறவினர்களுக்கு நன்றி கூறும் நாளாக இன்று அமையும். உறவு மேம்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். பொழுது போக்குகளில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 5

தனுசு 
இன்று மனம் அமைதி அடையும் நாள். உறவினர்களால் அன்பும், ஆதாயமும் கிடைக்கும்.  எதிர்பாராத செலவு உண்டு.  நண்பர்களிடம் வார்த்தைகளில் நிதானம் அவசியம். எச்சரிக்கையாக இருக்கவும். உங்களது நிதானமில்லாத பேச்சினால், இன்று பெரிய சிக்கலில் சிக்கி தவிப்பீர்கள்!
அதிர்ஷ்ட எண்: 2

மகரம் 
சிரிப்பும் ,கும்மாளமும் நிறைந்த நாள் இன்று. குடும்பத்தில் மகிழ்ச்சியும், பாராட்டும் குவியும் .புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நாள். வீட்டை அலங்கரிப்பீர்கள். அலுவலகத்திலும் ஆதரவு கிடைக்கும். பணவரவு  திருப்தியாக  அமையும். மொத்தத்தில் மிகச் சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் 
இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள் என்றாலும் திடீர் அதிர்ஷ்டத்தால் பணவரவும் உண்டு. எனவே எளிதாக சமாளிப்பீர்கள். உங்களுக்கு சாதகமான முடிவுகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சின்ன , சின்ன எதிர்பார்ப்புகள் வாழ்க்கைத்துணை மூலம் நிறைவேறும் நாள் இது. 
அதிர்ஷ்ட எண்: 8

மீனம் 
அலுவலகத்திலும், தொழிலிலும் உங்கள் திறமைகள் வெளிப்பட்டு ஆதாயம் காணும் நாளாக அமையும். உங்களின் செயல்பாடுகளில் காணப்படும் கவனக்குறைவால் சிறு சஞ்சலம் ஏற்படும். பேச்சில் நிதானம் அவசியம்.  மனம் அமைதி அடையும்.
அதிர்ஷ்ட எண்: 6