இந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த நாளாக அமையும்!

 

இந்த  ராசிக்காரர்களுக்கெல்லாம் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த  நாளாக அமையும்!

உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள்.

21-12-19 (சனிக்கிழமை)
நல்ல நேரம் 
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம் 
காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம் 
பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை 

மேஷம்
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும். 
அதிர்ஷ்ட எண்: 7 

ரிஷபம்
உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். ஆர்வ கோளாறினால், எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருடன் கடுமையாக நடந்து கொள்வதால் இருவருக்கும் இடையில் இணக்கத்தைப் பாதிக்கும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும்.
அதிர்ஷ்ட எண்: 6 

மிதுனம்
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.
அதிர்ஷ்ட எண்: 4 

கடகம் 
உடல் நலனுக்காக, குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.. 
அதிர்ஷ்ட எண்: 8 

சிம்மம்
குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். குழு செயல்பாடுகளில் ஈடுபட்டால் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6 

கன்னி 
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.
அதிர்ஷ்ட எண்: 5 

துலாம்
இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் – ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7 

விருச்சிகம் 
வெறுப்புணர்ச்சி மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் சகிப்புத் தன்மையை அது குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி உங்களின் முடிவெடுக்கும் சக்தியையும் குறைத்து, உறவில் நிரந்தரமான பிளவை ஏற்படுத்தும். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் – ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். 
அதிர்ஷ்ட எண்: 9 

தனுசு
நீங்கள் இன்று செய்யும் சில மாறுதல்கள் நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்துவதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும். ஆனால் எப்படியோ இன்று அனைத்தைம் சமாளித்து விடுவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6 

மகரம்
உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள். அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணைவர் சில டென்சனை ஏற்படுத்தலாம். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6 

கும்பம் 
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் – வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 4 

மீனம்
சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட எண்: 1