இந்த ராசிக்காரங்களுக்கு மட்டும் உறவுகளால் தான் ஏற்றம்!

 

இந்த ராசிக்காரங்களுக்கு மட்டும் உறவுகளால் தான் ஏற்றம்!

இன்று, உங்களது வேலைகளில் தடைகளும், தாமதங்களும் நிச்சயம் எட்டிப் பார்க்கும். இதனால், சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க முடியாத சூழல் உருவாகும்

24-7-19  (புதன்கிழமை)
நல்லநேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம்
பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சந்திராஷ்டமம்
பூரம் பகல் 1.47 வரை பிறகு உத்திரம்
பரிகாரம்
பால்

மேஷம் 
இன்று, உங்களது வேலைகளில் தடைகளும், தாமதங்களும் நிச்சயம் எட்டிப் பார்க்கும். இதனால், சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். ஆனால், இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல், கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஒதுங்கி நின்று, உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மிகவும் பொறுமையாக கடக்க வேண்டிய நாளாக இன்று உங்களுக்கு இருக்கிறது.

ரிஷபம் 

பிள்ளைகளால் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். இன்று உங்களது மனதைக் கவர்ந்தவரைச் சந்திப்பீர்கள். எல்லோரும் உங்களிடம் அன்பைப் பொழியும் நாளாக அமையும்.

மிதுனம் 
உங்கள் தன்னம்பிக்கைக்கு நிச்சயம் நியாயம் உண்டு. அதற்காக எச்சரிக்கை குணாதிசயங்களை காற்றில் பறக்க விட்டு விடாதீர்கள். பணம் விஷயத்தில் அதிக அக்கறையுடன் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் மீண்டு வரப் போகிற நாள், வெகு தொலைவில் இல்லை.

கடகம் 
இன்றும், இனி வரும் காலங்களிலும் உங்களுக்கு கடன் தொல்லைகள் குறையும். உங்கள் சாமர்த்திய சிந்தனைகளால் தடைகளை வெற்றிகரமாக கடந்து செல்வீர்கள். உங்களுக்கு நீங்களே தான் ஆசான். ஆகையால், முடிவெடுக்கும் போது மட்டும் கவனமாக செயல்பட வேண்டும். அது உங்கள் எதிர்காலத்தில் பெரும் பங்காற்றலாம்.

சிம்மம்
யாருக்காகவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம். விரைவில், உங்கள் நிதிச்சுமை குறையும். சுலபமாக சில சிக்கல்கள் தீர்ந்தாலும், தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ளாத வரை தனிமையில் இருப்பது போல் தான் உணருவீர்கள். அதுவரையில் உங்களுக்கு சங்கடங்களும் தீராது.

கன்னி 
பிரிவு என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இழப்பு என்பதும் நிரந்தரமல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிருக்கும் அளவுகோல் உள்ளது. யாருக்கும் தொடர் தோல்வியும் கிடையாது, அள்ள அள்ள வெற்றியும் கிடையாது. காலம் மாறும் வரையில் காத்திருங்கள்.

துலாம் 
ஏற்கனவே நீங்கள் பரபரப்பாகத் தான் இருக்கிறீர்கள்.வேலையில் மேலும் பரபரப்பாகப் போகிறீர்கள். அதற்காக குடும்பத்தை மறந்துவிட வேண்டாம். ஆனால், நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில், கால் பங்காவது குடும்பத்தினருக்கு கொடுங்கள். நண்பர்கள் யாரும் உங்களுடன் கடைசி வரை பயணிக்கப் போவதில்லை. உறவுகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு அது கொஞ்சம் கடினம் தான் என்றாலும், கடைசி வரை உங்களுக்குத் துணை நிற்கப் போவது உறவுகள் தான்.

விருச்சிகம்
முக்கியமான திட்டங்களுக்கு இன்றைய நாள் முழுவடிவம் கொடுங்கள். நிச்சயம் வெற்றிப் பெறும். மற்றவர்களின் ஆலோசனைகளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். அதையே முழுதாக நம்பி களமிறங்க வேண்டாம்.

தனுசு 
உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முயற்சிக்க வேண்டிய காலம் இது. பொழுதுபோக்கிற்கு சற்று விடைக் கொடுத்து, எதிர்காலம் குறித்து யோசியுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்.

மகரம் 
 மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயலாற்றுவதில் எந்த தவறும் இல்லை. உங்களது எண்ணங்கள் நிறைய விஷயங்களில் தவறாக போகக் கூடிய காலக்கட்டம் இது.  தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.. ஆனால், உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் விலை மதிப்பற்றது.

கும்பம் 
பணியிடத்தில் சில சங்கடங்கள் உருவாகும். சூழலுக்கு ஏற்ப வினையாற்றுங்கள். அதுவும் பொறுமையாக… எதையும் செய்து முடித்த பிறகு கவலைப்பட்டு என்ற அர்த்தமும் இல்லை. உடல் உபாதைகள் வந்து நீங்கும். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனவலிமையை இழந்து விடாதீர்கள். 

மீனம் 
பொது வாழ்க்கையில் எப்போதும் உங்களுக்கு ஒரு பற்று இருக்கும். ஆனால், குடும்ப உறவுகளில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் என்ன தான் பொதுநலமாக இருந்தாலும் அதனால் பயனில்லை. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரையில் உங்கள் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் இருக்காது. உடன் பிறந்தவர்களின் மேல் அக்கறைக் கொள்ளுங்கள்.