இந்த மூணு பேரால தமிழ்நாட்டுல கால் வைக்க முடியாம போச்சே….புலம்பும் பாஜக தலைமை!?

 

இந்த மூணு பேரால தமிழ்நாட்டுல கால் வைக்க முடியாம  போச்சே….புலம்பும்  பாஜக தலைமை!?

தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவால்  பாஜகவினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவால்  பாஜகவினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கிக் கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. 

ponnar

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் பாஜக 343 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

h raja

இந்நிலையில் தமிழகத்திலும் கால்பதித்து விட வேண்டும் என்ற பாஜகவின் கனவு இம்முறையும் கனவாகவே போயுள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழக  பாஜக தலைவர் தமிழிசை  தூத்துக்குடியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியை காட்டிலும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதே போல் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதா கிருஷ்ணனை  காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் பின்னுக்கு தள்ளியுள்ளார். சிவகங்கையில் ஹெச். ராஜாவை விட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் உள்ளார். 

tamilisai

இதனால் பாஜகவின் முக்கிய புள்ளிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் சிலர் இந்த தேர்தலில் தோல்வி முகத்தை சந்தித்துள்ளது பாஜகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகித்தாலும், தமிழகத்தில் அவர்கள் சந்தித்துள்ள இந்த பின்னடைவு வெற்றியை கொண்டாடுவதா? அல்லது தோல்வியை நினைத்து வருத்தப்படுவதா என்ற குழப்பத்தில் கமலாலயம் உள்ளதாக பாஜகவினர் புலம்பி வருகின்றனர்.