இந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்… நிர்பயா தாயார்

 

இந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன்… நிர்பயா தாயார்

இந்த முறை குற்றவாளிகள் கட்டாயம் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்நிலையில் இன்று நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிதாக டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது குறித்து நிர்பயா தாயார் ஆஷா தேவி கூறியதாவது: குற்றவாளிகளுக்கு எதிராக 3வது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நான் அதிகம் சந்தோஷப்படவில்லை. எனது போராட்டத்துக்கு கடைசியில் பலன் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி.

நிர்பயா வழக்கு

நான் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை மற்றும் நீதி வழங்கப்படும் என இன்னும் நம்புகிறேன் மேலும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டேன் மற்றும் குற்றவாளிகளுக்கு கிடைக்ககூடிய அனைத்து சட்ட தீர்வுகளும் முடிவடைய நான் ஆவலுடன் காத்திருந்தேன் இதனால் இறந்த எனது மகளுக்கு இறுதியில் நீதி வழங்கப்படும். பல சமயங்களில் நான் தாழ்வாக உணர்ந்தேன் ஆனால் ஒருபோதும் எனது மகளுக்கு நீதி தேடலில் விலகவில்லை. குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நீதிமன்றம் அறிவித்ததால் நான் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடைந்தேன். நான் பட்ட சிரமங்களுக்கு கடைசியில் பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.