இந்த மாதிரியான பெண்களை பலாத்காரம் செய்யுங்கள்: நடுத்தர பெண்மணியின் வைரல் வீடியோ; கடுப்பான நெட்டிசன்கள்!

 

இந்த மாதிரியான பெண்களை  பலாத்காரம் செய்யுங்கள்: நடுத்தர பெண்மணியின் வைரல் வீடியோ; கடுப்பான நெட்டிசன்கள்!

அரை குறை ஆடைகளுடன் வந்த இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளலாம் என்று கூறிய பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

ஹரியானா: அரை குறை ஆடைகளுடன் வந்த இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளலாம் என்று கூறிய பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

anuty

 

ஹரியானாவின் குருகிராமில்  ஒரு மாலுக்கு அரை குறை ஆடைகளுடன்  சென்ற பெண்களை  கண்ட  நடுத்தர வயது பெண் ஒருவர் அங்கிருந்த ஆண்களை அழைத்து நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இவர்கள் இப்படி குட்டை பாவாடை அணிந்து கொண்டு வருகின்றனர். அதனால் இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய ஏற்றவர்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அப்பெண்கள் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் ஷாக்காகி உள்ளனர். 

gurugram

இதனால் கடுப்பான அந்த பெண்கள்,  அவர் பின்னாலேயே வீடியோ கேமராவை ஆன் செய்து கொண்டு, நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்று கூறி கொண்டே பின்னாடியே செல்கின்றனர். ஆனாலும் அந்த பெண் மன்னிப்பு கேட்க மறுக்கிறார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில்  வைரலானது.  இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அந்த பெண்மணியைச் சகட்டு மேனிக்கு வசைபாடி வருகின்றனர்.  

 

இந்நிலையில் அந்த பெண், அவரது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதில், “நிபந்தனையில்லா மன்னிப்பை அனைத்து பெண்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கருத்தில் உள்ள தவறையும் கடுமையையும் நான் உணர்கிறேன். னது கருத்தால் பல பெண்கள் மனதால் பாதிக்கப்பட்டவைக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

viral video

பெண்களின் பாதுகாப்பிற்கும், அவர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கும் அவர்கள் உடுத்தும் ஆடை தான் காரணம் என்ற எண்ண ஓட்டம் பல பேரிடம் இருக்கிறது. பெண்களுக்கு அவர்களுக்குரிய உடைகளைத் தாமே தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது. ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்தால் அதை புரொஃபஷனல் என்று உயர்த்தும் சமுதாயத்தில், பெண்கள் விஷயத்தில் மட்டும் ஆடையைக் குறைப்பதுதான் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பெண்களையும், பெண்களின் உடலையும் வியாபார, விளம்பரக் காட்சிப்பொருளாக இந்த உலகம் மாற்றுகிறது. இது அடிமைத்தனம் என்று பெண்களுக்கும் புரிவதில்லை. அதே சமயம் பெண்கள் அணியும் ஆடைகளினால்  மட்டும் தான் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்கிறது என்பது முட்டாள் தனமானது என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.