இந்த மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 9 நாள் விடுமுறை! உங்க வேலைகளை ப்ளான் பண்ணி பண்ணுங்க!

 

இந்த மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 9 நாள் விடுமுறை! உங்க வேலைகளை ப்ளான் பண்ணி பண்ணுங்க!

இந்த டிசம்பர் மாதத்தில் வார விடுமுறை நாட்கள் உள்பட மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகையால் உங்க வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்து கொள்ளுங்கள்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த அனைத்து வங்கிகளுக்கும் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் மூடப்பட்டு இருக்கும். மேலும், பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகையை பொறுத்து அந்த தினங்களில் அந்த மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.

வங்கி

உதாரணமாக, பிஹு தினத்தன்று அசாமில் மட்டும் வங்கிகள் செயல்படாது. அதேபோல் ஓணம் பண்டிகையன்று கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். பாக்சிங் டே முன்னிட்டு டிசம்பர் 26ம் தேதியன்று சில வடகிழக்கு மாநிலங்களில் வங்கிகளுக்கு லீவு விடுவது வழக்கம். அப்படி பார்த்தால் இந்த மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை.  என்னென்ன தினங்களில் வங்கிகள் விடுமுறை என்பதை கீழே கொஞ்சம் பாருங்க

வங்கிகள்

டிசம்பர் மாத வங்கி விடுமுறை தினங்கள்
டிசம்பர்  1     ஞாயிறு
டிசம்பர்  8     ஞாயிறு
டிசம்பர் 14     இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 15     ஞாயிறு
டிசம்பர் 22     ஞாயிறு
டிசம்பர் 25     கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26     பாக்சிங் டே
டிசம்பர் 28     நான்காவது சனிக்கிழமை
டிசம்பர் 29     ஞாயிறு