இந்த மாதம் மோடி அரசு மேற்கொண்ட டாப் 5 நடவடிக்கைகள்

 

இந்த மாதம் மோடி அரசு மேற்கொண்ட டாப் 5 நடவடிக்கைகள்

இந்த மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம், பாஸ்டேக் உள்பட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் டாப் 5 நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இரு அவைகளில் குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டது. மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வேயின் முடிவு எடுக்கும் உச்ச அமைப்பான ஆண்டுகால ரயில்வே வாரியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பாஸ்டேக்

கடந்த 15ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பிபின் ராவத்

ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான களஞ்சியத்துக்காக, ஆதார் அடிப்படையில் அனைத்து விவசாயிகளின் தகவல்களை உருவாக்க மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு எடுத்தது.

பிபின் ராவத்

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் முப்படைகளுக்கு தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்