இந்த மாதம் நீதிமன்றம் மாதம்….. மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் வாங்கிய ராகுல்….

 

இந்த மாதம் நீதிமன்றம் மாதம்….. மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் வாங்கிய ராகுல்….

கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்  படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி துறந்தார். இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் உறுதியாக இருந்தார். இதனையடுத்து தற்போது அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுரி லங்கேஷ்

தலைவர் பதவியில்தான் இப்பம் ராகுல் இல்லையே,  இனி அவரு ப்ரீயாதானே இருப்பார்ன்னு தப்பு கணக்கு போடாதீங்க. அவருக்கு இந்த மாசம் பல நீதிமன்றங்களுக்கு போக வேண்டியது இருக்கு. கடந்த காலங்களில் பேசின பேச்சுக்கு இப்பம் ஒவ்வொரு நீதிமன்றமா போக போறார். 

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ்  கொலையை பா.ஜ.-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசி இருந்தார். இதனால் ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு வழக்கு தொடர்ந்தது. மும்பை நீதிமன்றத்தில் இன்று அந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜரானார்.  நீதிமன்றத்தில் தான் எந்ததவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் கூறினார். பின் நீதிமன்றம் அவருக்கு ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கியது.

ராகுல் காந்தி அடுத்து 6ம் தேதி பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டும். திருடர்கள் எல்லாரும் ஏன் மோடின்னு பெயர் வைச்சு இருக்கீங்க என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குதான் பாட்னா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

ராகுல் காந்தி

வரும் 9ம் தேதி அகமதாபாத் நீதிமன்றத்திலும், 12ம் தேதி குஜராத்தின் மற்றொரு நீதிமன்றத்திலும் ராகுல் ஆஜராக வேண்டும். அமித் ஷாவை சம்பந்தப்படுத்தி பேசிய வழக்கில் 9ம் தேதியும், அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் 12ம் தேதி அந்த நீதிமன்றங்களில் ஆஜராக உள்ளார்.

இம்மாதம் 24ம் தேதி சூரத் நீதிமன்றத்தில், மோடி எல்லோரும் திருடர்கள் என்று கூறியதால் மோடி சமூகத்தினர் தொடர்ந்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும். ஆக இந்த மாதம் முழுவதும் நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களுக்கு ராகுல் செல்ல வேண்டியது உள்ளது.