இந்த மருந்தை சாப்பிடும்போது மட்டும், குரங்கை நினைக்காதீங்க – சீனாவின் வில்லங்க அட்வைஸ்

 

இந்த மருந்தை சாப்பிடும்போது மட்டும், குரங்கை நினைக்காதீங்க  – சீனாவின் வில்லங்க அட்வைஸ்

தொழில்துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் உருவாகி, சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரியை அமெரிக்காவும், பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவும் கூடுதல் வரியை விதித்து வர்த்தகர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

சீனாவிலிருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கணிசமாக குறைந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் நடைபெறுவதன் தாக்கம், தொழில்துறையை தாண்டி, சுற்றுலாவையும் பாதித்துள்ளது.  சீனாவிலிருந்து அமெரிக்க சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 15 வருடங்களில் பல மடங்கு உயர்ந்துவந்தது. சீன சுற்றுலாப் பயணிகளால் ஆண்டுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அமெரிக்காவுக்கு வருமானம் கிடைத்துவந்தது.

US Tourism

தொழில்துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் உருவாகி, சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரியை அமெரிக்காவும், பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 60  பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவும் கூடுதல் வரியை விதித்து வர்த்தகர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கின்றன. கடந்த 2000மாவது ஆண்டில், சீனாவிலிருந்து வெறும் 2,49,000 சுற்றுலா பயணிகள் மட்டுமே அமெரிக்கா சென்றுவந்திருந்தனர். இந்த எண்ணிக்கை 2010ல் மும்மடங்காக பெருகி, 8,02,000 அளவுக்கு அதிகரித்தது. இதுவும்கூட 2015வாக்கில் மும்மடங்காக பலுகிப்பெருகியது. வர்த்தகப்போர் நடந்துவருவதால், 2018ஆம் ஆண்டில் 29 லட்சம் சீனர்கள் மட்டுமே அமெரிக்கா சென்றுவந்துள்ளனர்.

US Chinese talks

வர்த்தக்கப்போரை துவக்கிய அமெரிக்காவுக்கு பல்வேறு வழிகளில் பதிலடிகொடுத்துவரும் சீன அரசாங்கம், அமெரிக்காவுக்கு தன் குடிமக்கள் செல்வதை தடுக்கவும்கூடாது, அதேநேரம் அமெரிக்காவை பழிவாங்கவும் வேண்டும் என்ற கணக்கில் சீனப்பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்தது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்லும்போது துப்பாக்கிச்சூடு, கொள்ளை, மற்றும் அதீத மருத்துவ கட்டணங்கள் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என தன் குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. சீன அரசின் இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை அடுத்து, சீனப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.