இந்த பிரேமலதா சும்மா இருக்கக்கூடாதா..? பணத்துக்காக பரிதவிக்கும் விஜயகாந்த்..!

 

இந்த பிரேமலதா சும்மா இருக்கக்கூடாதா..? பணத்துக்காக பரிதவிக்கும் விஜயகாந்த்..!

மொத்தமாக அதிமுக தலையில் கட்டப்பார்க்கிறது தேமுதிக தலைமை. ஆனால் தேமுதிகவை அதிமுக கழற்றி விடும் முடிவில் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் எந்நேரத்திலும் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  தற்போது எதிர்க்கட்சியான திமுகவும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. 

vijayakanth

தொடர் தோல்வியால் எவ்வித வருமானமும் இன்றி தே.மு.தி.க நிர்வாகிகள் உள்ளனர். பல மாவட்ட செயலர்கள், எம்.பி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என கடன் நெருக்கடியில் உள்ளனர். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், கணிசமான பணத்தை செலவிட வேண்டும். தற்போதைய சூழலில் வேட்பாளர்களால் மட்டும் அது சாத்தியமில்லை. 

இதுவரை கட்சிக்காக செலவழித்தவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க கட்சி தலைமையும் உதவ வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இதுவரை பெற்ற தோல்விகளுக்கு மருந்து போட்டு விடலாம். கட்சியின் பொருளாளராக பிரேமலதா இருப்பதால், தேர்தல் செலவிற்கு பணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதையெல்லாம் மொத்தமாக அதிமுக தலையில் கட்டப்பார்க்கிறது தேமுதிக தலைமை. ஆனால் தேமுதிகவை அதிமுக கழற்றி விடும் முடிவில் இருக்கிறது.

Premalatha 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் 50 சதவீத இடங்களைக் கூட கேட்போம்’ என தேமுதிக தலைவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் கூறியது அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு விஜயகாந்தின் பிரசாரம்தான் காரணம் என தேமுதிகவினர் கூறிவந்தனர். கடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதோடு 3 சதவிகித வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளே பெற்றனர். அப்படி இருக்கும் போது உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் கேட்கும் சீட்டை பார்த்து அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். 

இதற்கான ரியாக்‌ஷன் தான் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மூலம் வெளிப்பட்டுள்ளது. சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பாக கால்நடைகளுக்கான நடமாடும் அவசர ஊர்தியை அமைச்சர் பாஸ்கரன் துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், ‘விஜயகாந்த் அரசியலுக்கு வந்து என்ன சாதித்தார்? நடிகர்களெல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். உங்களுக்குத் தெரியாதது இல்லை. விஜயகாந்த் கூட கட்சி ஆரம்பித்தார். என்ன சாதித்தார்?  எனக் கூறினார். 

edappadi

கூட்டணி கட்சியில் இருக்கும் தேமுதிகவை அமைச்சரே இப்படி கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் எடப்பாடிக்கு தெரியாமல் அமைச்சர் ஒருவர் கூட்டணி கட்சி தலைவரை இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர். அதோடு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை கொடுக்க கூடாது என்ற முடிவிலும் அதிமுக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணியில் புதிய குழப்பம் ஏற்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.