இந்த பரிகாரங்களைச் செய்தால் சந்திராஷ்டமம் நாளிலும் சந்தோஷமாக இருக்கலாம்

 

இந்த பரிகாரங்களைச் செய்தால் சந்திராஷ்டமம் நாளிலும் சந்தோஷமாக இருக்கலாம்

சந்திராஷ்டமம் அன்று நாம் எத்தனை தான் ஜாக்கிரதையாக இருந்தாலும், நாம் சாதாரணமாக பேசுகிற விஷயங்கள் கூட குடும்பத்தாரின் கோபத்தை தூண்டி விடுகின்றன. பக்கத்து வீட்டுக்காரரிடம் அன்றைய தினம் ஆரம்பிக்கிற பிரச்சினை அலுவலகத்தில் மேலதிகாரியிடம் எரிந்து விழுந்து, அன்றைய இரவு தலைவலியுடன் தூங்கச் செல்லும் வரையில் நீடிக்கும்.

சந்திராஷ்டமம் அன்று நாம் எத்தனை தான் ஜாக்கிரதையாக இருந்தாலும், நாம் சாதாரணமாக பேசுகிற விஷயங்கள் கூட குடும்பத்தாரின் கோபத்தை தூண்டி விடுகின்றன. பக்கத்து வீட்டுக்காரரிடம் அன்றைய தினம் ஆரம்பிக்கிற பிரச்சினை அலுவலகத்தில் மேலதிகாரியிடம் எரிந்து விழுந்து, அன்றைய இரவு தலைவலியுடன் தூங்கச் செல்லும் வரையில் நீடிக்கும். நிறைய பேர், அதன் பிறகோ, அடுத்த நாளோ காலண்டரைப் பார்த்து, ‘நேற்று சந்திராஷ்டமம்’ என்று விரக்தியாகப் பார்ப்பார்கள். 

moon

ஆனால் நீங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் சந்திரன் அத்தனை கொடுமையானவர் எல்லாம் கிடையாது. மனதைக் கட்டுப்படுத்தி, நம் அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத் தான் உண்டு. நம் அறிவாற்றலுக்கு அதிபதி சந்திரன் தான். சந்திராஷ்டம தினத்தில் அறிவும், மனசும் சுயம் இழந்துப் போனால், நாம் பேசுகிற வார்த்தைகள் எப்படி பிரச்சினைகளைக் கொண்டு வராமல் இருக்கும். 

சில எளிய பரிகாரங்களின் மூலமாக சந்திராஷ்டம தினத்தைக் கடந்து வரலாம். குறிப்பாக தேய்பிறைகளில் வருகின்ற சந்திராஷ்டம தினத்தில் கண்டிப்பாக இந்த பரிகாரங்களைச் செய்யுங்கள். தேய்பிறை சந்திராஷ்டமத்தில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.சாதாரண பிரச்சினை கூட விஸ்வரூபம் எடுத்து பெரிய பிரச்சினையாக உருமாறும். 

chandrashtam

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்: 

சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்து, அன்றைய நாளைத் துவங்கினால், சந்திராஷ்டமத்தால் பாதிப்புகள் ஏற்படாது. 

விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம நாட்களில் கெடுபலன்கள் நேராது. சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிற ஆடையில் அசுத்தம் மற்றும் கரை படுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.ஆனால், இவை தற்செயலாக நிகழ வேண்டும். 

திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும். சந்திராஷ்டம தினத்தின் காலைப் பொழுதை இனிப்புடன் ஆரம்பியுங்கள். 
அன்றைய தினம் குருவின் ஆதிக்கம் பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக ஒரு மஞ்சள் துணியில் கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.