இந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு உதவும் சீனா!

 

இந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு உதவும் சீனா!

பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க சீனா ஒரு லட்சம் வாத்துகளை அனுப்ப உள்ளது. 

பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க சீனா ஒரு லட்சம் வாத்துகளை அனுப்ப உள்ளது. 

கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்கு சூடான் உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலங்களை அழித்துவருகின்றன. அண்மையில் பாகிஸ்தானிலும் வெட்டுகிளிகளின் அட்டூழியம் அதிகரித்துவருகிறது.  சிந்து,பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பாழக்கி வருகின்றன. இதனால் அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 

Locusts

இந்நிலையில் பாகிஸ்தானில் வெட்டுகிளிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சீனா ஒரு லட்சம் வாத்துகளை அனுப்ப உள்ளது. சீனா கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் மல்லார்டு இன வாத்துக்களை விமனத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. இவை வெட்டுக்கிளிகளை அழிக்கும் திறனுடையது. அதாவது ஒரு வாத்து சுமார் 200 வெட்டுக்கிளிகளை உண்ணும். இந்த ஒரு லட்சம் வாத்துக்களுக்கும் குவோஷொவோ 1 என்ற வாத்து தலைமை தாங்கும் என சீன வேளான் ஆராய்ச்சி மையம் தெரிவித்துளது.