இந்த நடிகருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்… அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

 

இந்த நடிகருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்… அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

குறிப்பாக  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

 

வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய படத்தில்  ’பத்மா’ கதாபாத்திரத்தில் சிரமமே இல்லாமல் நடித்து பெயர் வாங்கி சென்றார். அதேபோல் கனா  படமும் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.குறிப்பாக  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

ttn

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நீங்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து விட்டீர்கள்? வேறு எந்த எந்த நடிகர்களுக்கு தங்கையாக நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான்  எந்த நடிகருக்கும் தங்கையாக நடிக்க தயார். ஆனால் விஜய் சாருக்கு மட்டும் நான் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.