இந்த திட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பா? அப்ப அந்த திட்டம் கேன்சல்- அதிரடி காட்டும் ஜெகன் மோகன்

இந்த திட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பா? அப்ப அந்த திட்டம் கேன்சல்- அதிரடி காட்டும் ஜெகன் மோகன்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திட்டத்தை நிறுத்திவைக்குமாறும் முதலமைச்சர் கெஜன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிறந்த பிறகு, ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி இருந்து வருகிறது. இதனைப் பற்றிய விவாதம் ஆந்திர மாநிலச் சட்டசபையில் நடைபெற்றது.  அதில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ” தெலுங்கானா பிரிந்து சென்றதிலிருந்து நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது இருக்கும் அமராவதியைச் சட்ட சபை தலைநகராகவும், விசாக பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும்,  கர்னூலை நீதித்துறைகளுக்கான தலைநகராகவும் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 3 தலைநகரை உருவாக்கவதை நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இதனைப் பற்றி மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார். இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அமரவாதி நகரைச் சுற்றியுள்ள 29 கிராம மக்கள் தர்ணா, சாலை மறியல் மற்றும் வீதிகளில் உணவு சமைத்து போராட்டத்தை நடத்தினர்.

farmers protest

இந்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படுவதால்  ஆந்திரபிரதேசத்தின் தலைநகரை மாற்றுவது குறித்து எடுக்கப்பட்ட விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பதை ஆந்திர அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்ட பிறகு ஆந்திர தலைநகரை மாற்றும் திட்டத்தை கையிலெடுக்கலாம் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தெரிவித்துள்ளது.