இந்த தவறுகளைச் செய்கிறீர்களா… உங்கள் காது கேட்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் !?

 

இந்த தவறுகளைச் செய்கிறீர்களா… உங்கள் காது கேட்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் !?

சின்ன தலைவலி,காய்ச்சல் என்றால் கூட டாக்டரைத் தேடி ஓடும் மக்கள் காது சம்பந்தமான பிரச்சினைகளை மட்டும் அலட்சியமாக டீல் பண்ணுவார்கள். இன்னும் சிலர் தாங்கள் கேளிவிப்பட்ட ஆலோசனைகளை சொந்தமாக செய்து பார்க்க முயற்சிப்பார்கள்.காது கேட்கும் திறன் என்பது ஒருவரின் சீரான ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது இதனை பலரும் அறியாதிருப்பதால் தான் காது சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகள் தாக்குகிறது. தவிர, மருத்துவர்களும் காது பரிசோதனையை தவறாமல் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.இப்போது எந்த பிரச்னையும் இல்லையென்றாலும் நாம் தினசரி செய்யும் வேலைகளினாலும் காதிற்கு பிற்காலத்தில் அபாயம் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றனர். 

headset

1.அதிக சத்தம் கூடவெ கூடாது!:

நீங்கள் அதிக சத்ததுடன் பாடல்களை கேட்பவரா? அப்படி இருந்தால் உடனே அந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் காதுகள் கேட்கும் திறனை விட்டு விடும்! குறிப்பாக ஹெட் செட் அணிந்து அதிக வால்யூம் வைத்து கேட்டால் அவை உங்கள் காதுகளை மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கிவிடும். மேலும் இயர் பாட் பயன்படுத்துவது மிகவும் ஆபத்து என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவை உங்கள் காதுகளுக்குள் காற்று புகாத அளவுக்கு அடைத்துக்கொண்டு இருக்கும்.அப்படி இருக்கும் போது நீங்கள்கேட்கும்இசையின்சப்தம் மிகவும் அதிகமாய் உங்கள் காதுக்குள் இருக்கும் இதனால் மெல்லிய ஜவ்வை தாக்கும்.தொடர்ந்து அப்படிக் கேட்டால் உங்கள் காதுகள் சீக்கிரம் கேட்கும் திறனை இழக்கும் அபாயம் நேரிடும். 
மிதமான அளவு சத்தம் வைத்து பாடல்களை கேட்பது உங்களுக்கும் உங்கள காதுகளுக்கும் மிகவும் நல்லது. 

voulme

2.ப்ளோ ட்ரையர் வேண்டாம்!

உங்கள் கூந்தலை எப்போதும் இயற்கையாகவே காற்றில் உலரவிடுவது உங்கள் கூந்தலும் உங்கள் காதுகளுக்கும் நன்மை தரும். சிலர் ப்அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டும் என்பதற்காக ப்ளோ டிரையர்களை பயன்படுத்துண்டு. அது அதிக சத்தத்தை  உண்டாக்கும்,மேலும் இதனை காதருகில் நீண்ட நேரம் வைத்து கூந்தலை உலர்த்துவதால் அதின் இரைச்சல் காதுகளை அதிகமாக பாதிக்கும். 

dry

3.வசிக்கும் பகுதியும் முக்கியமே!:

நீங்கள் அதிக இரைச்சல் உள்ள பகுதியில் இருந்தால் அதுவும் உங்கள் காதுகளையும் மனதையும் பாதிக்கும். மேலும் அதிக இரைச்சலுள்ள பகுதிகளுக்கு நீங்கள் செல்லும்போது உங்கள் காதுகளை கவர் செய்துகொள்ளுவதில் ஒன்றும் தப்பில்லை.இதனால் ஏற்படும் தலைவலி, எரிச்சல் போன்றவையும் குறையும். உங்கள் காதுகளை காப்பதில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுதல் தவறில்லை அது உங்கள் உடலிற்கும் அமைதி தரும். 

model

4. மருந்துகளில் கவனம் தேவை:

காது வலி வந்ததும் உடனே எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை ஊற்ற கூடாது அவை பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்திவிடும். உடனடியாக மருத்துவரிடம் சென்று காதுகளை பரிசோதித்து கொள்ளவேண்டும். காதில் சிறிய உபாதை வந்ததும் உடனடியாக ஆரம்ப காலத்திலேயே சரிசெய்து கொள்ளவேண்டும் வீட்டு மருத்துவம், கை வைத்தியம் போன்றவை எதிர்வினை ஆற்றிவிடும். 

model

காதினை பட்ஸ்,குச்சி, இறகு போன்றவற்றை வைத்து  குடைதல்  போன்றவை செய்ய கூடாது ஆரம்பத்தில் சுகமாக இருந்தாலும் இறுதியில் பாதிப்பை தந்துவிடும்.ஜுரம் இருந்தால் அதன் வெப்பம் காதுகளின் நரம்புகளை  பாதிக்கும். மேலும் உங்களின் காதுகளில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் இருந்தாலும் காதுகளில் வீக்கத்தை வரவழைத்துவிடும். ஆக உடனடியாக மருத்துவரிடம் சென்று காதுகளை பரிசோதித்து கொள்ளவேண்டும்.