இந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா! – காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க செய்த எஸ்.வி.சேகர்

 

இந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா! – காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க செய்த எஸ்.வி.சேகர்

சீனா, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பா.ஜ.க தலைவர் பதவிக்கு போட்டிப்போட்டு வரும் எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவை 40 ஆண்டுகளுக்கு முன்பு போட்டிருந்தால் நாடு சிறப்பா இருக்கும் என்று எஸ்.வி.சேகர் ட்வீட் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

sonia-gandhi

கொரோனா வைரஸ் சீனாவை விட்டு வெளியேறி பல நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இத்தாலி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணி மூலம் இந்தியாவிலும் பரவ இருந்தது கண்டறியப்பட்டது.

corona-67

இந்த நிலையில், சீனா, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பா.ஜ.க தலைவர் பதவிக்கு போட்டிப்போட்டு வரும் எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. – செய்தி இதை 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா நம்ம நாடு இன்னும் சிறப்பா இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

அதாவது, 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி தடை விதித்திருந்தால் சோனியா காந்தி இந்தியாவுக்கு வந்திருக்க முடியாது என்ற வகையில் பதிவிட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். எஸ்.வி.சேகருக்கு எதிராக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.