இந்த செடிகள் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தி அண்டுமாம்… பிடுங்கி தூர வீசுங்க

 

இந்த செடிகள் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தி அண்டுமாம்… பிடுங்கி தூர வீசுங்க

ஒரு வீட்டை வாஸ்துப்படி கட்டுவது அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க செய்கின்ற செயலாகும். இதன் படி அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிலவி சந்தோஷம் நிலை பெறும்.

ஒரு வீட்டை வாஸ்துப்படி கட்டுவது அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க செய்கின்ற செயலாகும். இதன் படி அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிலவி சந்தோஷம் நிலை பெறும்.

அதே மாதிரி வாஸ்து சாஸ்திரப்படி சில தாவரங்களை வீட்டில் வைக்கவே கூடாது. இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ வாய்ப்புள்ளது. 

வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். ஆனால் ஃபெங் சுய் சாஸ்திரப்படி பார்த்தால் இந்த தாவரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்க கூடியது என்கின்றனர்.

இந்த குறிப்புகளின்படி கீழ்க்கண்ட தாவரங்களை வீட்டில் வைப்பதை தவிருங்கள். இந்த ஃபெங் சுய் குறிப்புகளில் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களும் வீட்டுக்குள் நன்மையை அளிக்கின்ற குறிப்புகள், வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வருகின்ற

cactus

முட்களையுடைய ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. ஆனால் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அது மட்டும் வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அது வீட்டுக்கு நன்மையைக் கொடுக்கும்.

ponsai

சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது என்கின்றது வாஸ்து சாஸ்திரம். வேண்டும் என்றால் தோட்டத்தில் வைத்துக் கொள்ளலாம்.

புளிய மரம் மற்றும் மிர்ட்டில் செடி வகைகளில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லது அல்ல. அதேபோல் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

bad

வாடும் செடிகள் மற்றும் பூக்கள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. காய்ந்த செடிகள், வாடிய செடிகள், பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டவை, முட்களையுடைய மர வகைகள் மற்றும் பாபுல் மரம் போன்றவை எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.

bud

இந்த மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது. பொதுவாக நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சிறிய அல்லது பெரிய தொட்டிகளில் உள்ள தாவரங்களை வடக்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாது. வீட்டில் தொங்கவிடும் படியான தொட்டிச் செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.

badu

பெரிய மரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் ஏற்படுத்தும். பொதுவாக வீட்டைச் சுற்றிலும் மரங்கள் இருப்பது நல்லது தான் என்றாலும் கிழக்கு திசை பார்த்து மரங்கள் வைக்காமல் இருப்பது வீட்டுக்கு கெட்ட சக்தியை அழைத்து வராமல் இருக்கும்.