இந்த சர்காரின் கஜானாவில் நிரம்பியது எவ்வளவு தெரியுமா?

 

இந்த சர்காரின் கஜானாவில் நிரம்பியது எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் வசூல் ரூ.250 கோடியை நெருங்கி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் வசூல் ரூ.250 கோடியை நெருங்கி புதிய சாதனை படைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கில் கடும் சர்ச்சைக்கு பின் தீபாவளிக்கு வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் ரிலீசான ‘சர்கார்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்ததுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற சர்கார் திரைப்படம், தற்போது புதிய சாதனையையும் படைத்து கோலிவுட் வட்டாரத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளிக்கு ரிலீசான இப்படம் வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 60% இருக்கைகள் ஃபுல்லாக இருந்து வசூலை வாரி குவித்து வருகிறது.