இந்த கார வாங்கற காசுல ஒரு ஊர வாங்கலாம்! உலகின் காஸ்ட்லி கார்கள் லிஸ்ட்ட பாருங்க!

 

இந்த கார வாங்கற காசுல ஒரு ஊர வாங்கலாம்! உலகின் காஸ்ட்லி கார்கள் லிஸ்ட்ட பாருங்க!

உங்களிடம் காசிருந்தால் போதும்,ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனி உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்துதரும்.உதாரணத்திற்கு ரோல்ஸின் ஸ்வெப்டெய்ல் காரை எடுத்துக்கொள்ளுங்கள்.கூப் வகை காரான இது ஒரு வாடிக்கையாளருக்காக தயாரிக்கப்பட்டது.

உங்களிடம் காசிருந்தால் போதும்,ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனி உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்துதரும்.உதாரணத்திற்கு ரோல்ஸின் ஸ்வெப்டெய்ல் காரை எடுத்துக்கொள்ளுங்கள்.கூப் வகை காரான இது ஒரு வாடிக்கையாளருக்காக தயாரிக்கப்பட்டது.

sweptail

பழைய ரோல்ஸ் ராய்ஸ் கிளாசிக் கார்களின் டிசைனையும் உல்லாச படகுகளின் ஸ்டைலையும் கலந்து செய்த இந்தக் காரை உருவாக்க நான்குவருடம் வேலை செய்திருக்கிறார்கள்.அனேகமாக காரின் எல்லா பாகங்களுமே,இந்த காருக்காகவே பிரத்யேகமாக செய்யப்பட்டவை. 

இந்தக் காரோட  விலை என்ன தெரியுமா..! மென்மையான இதயம்படைத்தவர்களும்,20 வருடமாக ஒரே காரை வைத்திருப்பவர்களும் மேற்கொண்டு படிக்காதீர்கள் ப்ளீஸ்! 

rolls royce

‘Rolls Royce Sweptail’ 13 மில்லியன் டாலர்! அதாவது ஒரு கோடியே முப்பது லட்சம் டாலர்.நம்ம ஊர் காசுக்கு அதிகமில்லை ஜெண்டில் மேன்,100 கோடிக்கு உள்ளதான்!

‘Mercedes Benz Maybach Exelero’ 2004-ல் அறிமுகமானபோது 8 மில்லியன் விலையில் உலகிலேயே காஸ்ட்லி கார் என்கிற பந்தாவான அறிமுகத்துடன் வந்த மாடல் இது.பணவீக்கம் காரணமாக இன்று அமெரிக்காவில் இதன் விலை 10.1 மில்லியன் டாலர்.நம்ம ஊர் பணத்தில் 77 கோடி ரூபாய்.டாலரும்,மேபேக் மாடலும் இட்லியும் சட்னியும் போல சேர்ந்தே இருப்பவை.இரண்டே கதவுகள்தான்.700 ஹெச்பி,ட்வின் டர்போ வி12 இஞ்சின் என்று பெருமை பேசுகிறது பென்ஸ்.

trevita

‘Koenigsegg CccXR trevita’ இந்த காரின் மேல் பூச்சில் வைரம் கலந்திருக்கிறதாம். வைரம் விற்கிற விலை உங்களுக்கே தெரியுமில்லையா!? இதன் ஸ்வீடிஷ் தயாரிப்பாளர் கார்பனுடன் ‘வைர’துகள் கலந்த பெயிண்ட்டை உருவாக்கி இருக்கிறது.

இந்த விலையுயர்ந்த ஃபினிஷிங்கின் கீழ் 4.8 லிட்டர் டூயல் சூப்பர் சார்ஜ் வி 8 இஞ்சின் 1004 குதிரை சக்தியுள்ள இஞ்சின் இருக்கிறதாம்.அதனால்தான் இதன் விலை 4.8 மில்லியன் டாலர்கள்.அதாவது,நம்ம ஊர் காசில் 35 கோடிரூபாய்.

veneno

‘Lamborghini veneno’ இந்தப்பெருக்கு இத்தாலிய மொழியில் ‘விஷம்’ என்று பொருள்.லம்போர்கினி நிறுவனத்தின் 50-வது பிறந்தநாளில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இது.அவர்களது நோக்கம்,நமக்குத் தெரியாது! ஆனால் இந்தக் கார் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உங்கள் மூச்சை நிறுத்திவிடும்.
ஏதோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து பூமியைக் கைப்பற்ற வந்த வாகனம் போலவே தோன்றும்.இந்தக் கார் 6.5 லிட்டர் வி12  8400 ஆர்பிஎம் வேகத்தில் சுழன்று 740 குதிர் சக்தியுடன் 2.9 வினாடியில் 90 கி.மீ வேகம் தருமாம்.விலை 4.5 மில்லியன் டாலர்கள்.அதாவது 33 கோடி ரூபாய்.

hypersport

‘W Motors. Lyman Hypersoport’ இந்தகார் சினிமாவில் நடித்திருக்கிறது.
‘ஃபூரியஸ் 7’ படத்தில் துபாயில் மூன்று ஸ்கைஸ் ராப்பர்களைத் துளைத்துக் கொண்டு போகுமே அந்த கார்தான் இது.

‘சிசர் டோர்ஸ்’ என்று அழைக்கப்படும் மேல்பக்கமாக திறக்கும் கதவுகளுடன் உள்ள கார்.இந்த ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார் 3.7 லிட்டர் சக்தி கொண்ட இதன் இரட்டை  டர்போ இஞ்சின் 770 ஹெச்பி பவர்தருகிறது.3.4 மில்லியன் டாலர் விலை , அதாவது 23 கோடி ரூபாய்.இந்தக் காரை அபுதாபி போலீஸ் வாங்கி ஹைவே பேட்ரோலுக்கு பயன்படுத்துகிறது.எல்லாம் பெட்ரோல் படுத்தும் பாடு.பாலைவனச் சாலைகளில் வில்லன்களை விரட்ட 2.8 வினாடியில் 100 கிமீ வேகம் எட்டும் கார் தேவைதான்.