இந்த ஆண்டு சென்னைக்கு  ‘நோ’ தண்ணீர் பஞ்சம் – அடித்து சொல்லும் வெதர் மேன்

 

இந்த ஆண்டு சென்னைக்கு  ‘நோ’ தண்ணீர் பஞ்சம் – அடித்து சொல்லும் வெதர் மேன்

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியிலிருந்துதான் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுற்றுவட்டாரங்களிலுள்ள கிராமத்திற்கு பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு, சேலம், மேட்டூரில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்ததால், வீராணம் ஆறு முறை ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அண்மையில் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், எதிர்வரும் கோடை காலத்தில், சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வராது என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “ சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உட்பட 5 ஏரிகள் 7500 எம்.சி.டி நீரை இருப்பு வைத்துள்ளன. அதுமட்டுமின்றி கிருஷ்ண மற்றும் கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி இறுதிக்குள் சென்னையிலுள்ள அனைத்து ஏரிகளும் 8000 எம்.சி.டி. அளவை எட்டும், நிச்சயம் 2020 வறட்சியில்லாத ஆண்டாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.