இந்த ஆண்டின் சிறந்த ஆன்லைன் கேம் எது தெரியுமா?

 

இந்த ஆண்டின் சிறந்த ஆன்லைன் கேம் எது தெரியுமா?

2018ஆம் ஆண்டின் சிறந்த கேம் விருதை ‘பப்ஜி’ தட்டிச் சென்றுள்ளது. அதையொட்டி பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்திய பப்ஜி கார்ப்பொரேஷன் நிறுவனம் இதை விளையாடுபவர்களுக்கு  பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் சிறந்த கேம் விருதைபப்ஜிதட்டிச் சென்றுள்ளது. அதையொட்டி பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்திய பப்ஜி கார்ப்பொரேஷன் நிறுவனம் இதை விளையாடுபவர்களுக்கு  பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

2018ன் தொடக்கத்தில் சர்வதேச அளவில் பப்ஜி வெளியிடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் 10 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளதாக கூகுள் ப்ளே ஸ்டோர் தெரிவித்துள்ளது.

pubg

வருவாயில் மட்டுமல்லாமல் கூகுள் ப்ளே ஸ்டார் வழங்கும் சிறந்த கேம் என்ற விருதையும்  இந்தாண்டு பப்ஜி தட்டிச் சென்றுள்ளது.இத்துடன் ரசிகர்கள் விரும்பும் விளையாட்டு மற்றும் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த விளையாட்டு ஆகிய விருதுகளையும் தட்டி சென்றுள்ளது.

இதைக் கொண்டாடும் விதமாக ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் பப்ஜி  விளையாடுபவர்கள் இலவசமாக 2 டாலர்கள் வரையில் கேம் க்ரெடிட்டை பெற்றுக்கொள்ளலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பப்ஜி கார்ப்பொரேஷன் அறிவித்துள்ளது. இதனால் பப்ஜி  ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.