‘இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம்’ :மீண்டும் சிறைக்கு சென்ற பேரறிவாளன்; கண்ணீர் விட்டு கதறிய அற்புதம்மாள்

 

‘இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம்’ :மீண்டும் சிறைக்கு சென்ற பேரறிவாளன்; கண்ணீர்  விட்டு கதறிய அற்புதம்மாள்

நவம்பர் மாதம் பரோலில் வந்த பேரறிவாளன், ஜோலார்பேடையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். 

ராஜீவ்  காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கைதாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். குறிப்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனை விடுதலை செய்யக்கோரிப் போராடி வருகிறார். சமீபத்தில்  தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நவம்பர் மாதம் பரோலில் வந்த பேரறிவாளன், ஜோலார்பேடையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். 

ttn

இந்நிலையில் பேரறிவாளனுக்கு பரோல் நேற்று முடிவடைந்ததைத்  தொடர்ந்து அவர் பாதுகாப்பாகப்  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ‘என் மகன் 29 ஆண்டுகளாக எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் இருக்கிறார். இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம்.  பரோல் நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகன் உங்களிடம் திரும்புவார் என வாக்களித்தார். அந்த நம்பிக்கையில் தான் என் மகன் விடுதலை ஆவார் என எதிர்ப்பார்திருந்தேன். ஆனால் தற்போது பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்வது வேதனையாக உள்ளது’ என்று கண்ணீர்  மல்க தெரிவித்துள்ளார். 

ttn

முன்னதாக பேரறிவாளனுக்கு அவரது  தந்தையின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு  2 மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.