இந்தோனேசிய கரன்சியில் ஜொலிக்கும் வினாயகர் திருஉருவப்படம்

 

இந்தோனேசிய கரன்சியில் ஜொலிக்கும் வினாயகர் திருஉருவப்படம்

இந்தோனேஷியாவின் கரன்சியான் 20,000 ருப்பியாவில் இப்போது வினாயகர் படம்தான் உள்ளது. இந்தோனேசிய குழந்தைகளுக்கான கல்வி ஆர்வலரும் புகழ்பெற்ற கல்வியாளருமான கி ஹஜர் தேவந்தராவின் படமும் இந்த கரன்சியில் உள்ளது.

மொத்த மக்கள்தொகையில் 89% பேர் இஸ்லாமியர்களாகவும், 3% பேர் இந்துக்களாகவும் இருக்கும் இந்தோனேசியா இப்போது வேண்டுமானால் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்கலாம். ஆனால், தோராயமாக 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே இந்துமதம் பிரபலமானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தற்போதும் காணக்கிடைக்கின்றன. இந்தோனேஷியா முழுவதுமே பழங்கால கோவில்கள் இன்னமும் உள்ளன.

20000 Rupiah note with Lord Ganesha

அட, அவ்வளவு ஏன், இந்தோனேஷியாவின் கரன்சியான் 20,000 ருப்பியாவில் இப்போது வினாயகர் படம்தான் உள்ளது. இந்தோனேசிய குழந்தைகளுக்கான கல்வி ஆர்வலரும் புகழ்பெற்ற கல்வியாளருமான கி ஹஜர் தேவந்தராவின் படமும் இந்த கரன்சியில் உள்ளது. ஆனைமுகத்தோனின் அவதார திருநாளாம் இன்று இந்த செய்தி பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம்!