இந்தோனேசியா- வெள்ளத்தால் 42 பேர் உயிரிழப்பு – பல்லாயிரக்கணக்கானோர் பரிதவிப்பு 

 

இந்தோனேசியா- வெள்ளத்தால் 42 பேர் உயிரிழப்பு – பல்லாயிரக்கணக்கானோர் பரிதவிப்பு 

இந்தோனேசியாவில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட  வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் 24 ஆண்டுகளில் ஜகார்த்தா பகுதி மிகவும் கடுமையான மழையை அனுபவித்ததால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்தோனேசியாவில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட  வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் 24 ஆண்டுகளில் ஜகார்த்தா பகுதி மிகவும் கடுமையான மழையை அனுபவித்ததால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

ஜகார்த்தாவின் கிழக்கே பெக்காசியில் இருந்து 400,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்று பிஎன்பிபி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. கொம்பாஸ் டி.வி. செய்தி படி, வெள்ள நீர் வடிந்து, மின்சாரம் மீண்டும் இயக்கப்படுவதால், ஆபத்து மையங்களில் உள்ள சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

indonesia

17 பேர் நீரில் மூழ்கி, 12 பேர் நிலச்சரிவுகளால் கொல்லப்பட்டதாக பி.என்.பி.பி.கூறியது. புத்தாண்டு தினத்தன்று 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மிக அதிகமாக இருந்தது என்று நாட்டின் வானிலை மையம்  கூறுகிறது, 2013 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளை விட இது  பெரிய வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்தது.

indonesia-01

பாதிக்கப்பட்ட 85% பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. நகரின் இரண்டாவது பெரிய விமான நிலையமான ஹலிம் பெர்தானகுசுமாவில் வியாழக்கிழமை இயல்பு நிலைக்கு திரும்பியது.

இருப்பினும், புத்தாண்டுக்கு முன்னதாக ஒரே நாளில்  377 மில்லிலிட்டர் அளவுக்கு மழை பெய்த பிறகு ஜகார்த்தா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து  மின்சாரம் இல்லாமல் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை நிறுவனம் எதிர்பார்க்கிறது.

indonesia-02

பேரழிவிலிருந்து காக்க 16 டிரில்லியன் ரூபாயை (25 8251.54 கோடியை) செலவு எட்டக்கூடும்
 மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்று சிங்கப்பூரில் உள்ள ஓவர்சியா-சீன வங்கி கார்ப்பரேஷனின் பொருளாதார வல்லுனரான வெலியன் விராண்டோ வெள்ளிக்கிழமை கூறினார் .