இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணி முடிவடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள மாலுக்கு எனும் தீவில் 31 கிலோமீட்டர் தூரம் மற்றும் 29 கிலோ மீட்டர் ஆழம் என்ற அளவில் கடந்த புதன்கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. 

indonesia

சுனாமி குறித்து எந்தவித எச்சரிக்கையும் முன்னமே இந்தோனேசிய அரசு தெரிவிக்காததால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மேலும் அதிகாலை 5.16 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டிருப்பதால் இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்தும் உயிரிழந்தும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது. 

புதன்கிழமை மதியம் 12 மணியிலிருந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துவங்கியது. ஞாயிறு வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, இதில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தினர்.

5.16 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்ததாக 6.46 மணி அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இரண்டு மணி நேர இடைவெளிக்குள் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என இந்தோனேசியா அரசு தெரிவித்திருக்கிறது. 

அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.