இந்தோனேசியாவில் 6 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலை : இதுவரை 30 பேர் உயிரிழப்பு!

 

இந்தோனேசியாவில் 6 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலை  : இதுவரை 30 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியதால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியதால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலாவேசி  தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7 புள்ளி ஐந்தாகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

tsunami

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் வாபஸ் பெறப்பட்ட அரை மணிநேரத்திற்குப் பின்னர் இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது. 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கட்டடங்கள், வாகனங்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. 

சுனாமி  பாதிப்பு குறித்து  விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனாலும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.