இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவு

 

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவு

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்

ஜகர்த்தா: சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் சில தினங்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 844 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் சம்பா தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.