இந்து-முஸ்லிமை நான் நம்பவில்லை… கலவரத்தில் இறந்தது 52 இந்தியர்கள்…..நாடாளுமன்றத்தை மத அடிப்படையில் பிரிப்போமோ?…. எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய அமித் ஷா…

 

இந்து-முஸ்லிமை நான் நம்பவில்லை… கலவரத்தில் இறந்தது 52 இந்தியர்கள்…..நாடாளுமன்றத்தை மத அடிப்படையில் பிரிப்போமோ?…. எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய அமித் ஷா…

நாடாளுமன்றத்தில் வடகிழக்கு டெல்லி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் பேசுகையில், இந்து-முஸ்லிமை நான் நம்பவில்லை. கலவரத்தில் இறந்தவர்கள் 52 பேரும் இந்தியர்கள். நாடாளுமன்றத்தை நாம் மத அடிப்படையில் பிரிப்போமா? என எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கினார்.

கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நடைபெற்ற மோதல் பெரும் கலவரமாக மாறியது. 4 நாட்கள் நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பொது சொத்துக்களை கலவரக்காரர்கள் நாசம் செய்தனர். பல அப்பாவி குடும்பங்களுக்கு பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கழிந்தன.

வடகிழக்கு டெல்லி கலவர காட்சிகள்

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வடகிழக்கு டெல்லி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் கலவரம் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சென்ற வாரம் நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது கலவரத்தில் பலியானவர்களில் எத்தனை பேர் இந்துக்கள்? முஸ்லிம்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி எழுந்தது. 

அமித் ஷா

அதற்கு அமித் ஷா அதிரடியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் குறிப்பிட வேண்டாம் என சபையை வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இந்தியர்கள். நான் இந்து-முஸ்லீமை நம்பவில்லை. டெல்லி கலவரத்தில் 52 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். நாம் நாடாளுமன்றத்தை மத அடிப்படையில் பிரிப்போமா? என எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் சாடினார்.