இந்து முன்னணி கட்சி செயலாளர் காருக்கு தீவைப்பு.. கண்டனம் தெரிவித்து 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு!

 

இந்து முன்னணி கட்சி செயலாளர் காருக்கு தீவைப்பு.. கண்டனம் தெரிவித்து 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு!

வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த இவரது கார் இன்று அதிகாலை 3 மணி அளவில்  திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது

திருப்பூர் கொங்குப் பகுதியில்  வசித்து வருபவர் மோகன். இவர் இந்து முன்னணி  கட்சியின் கோட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த இவரது கார் இன்று அதிகாலை 3 மணி அளவில்  திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ttn

அதில், பைக்கில் சென்ற 4 பேர் மோகனின் காரை நோட்டமிடுவதும், சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த அந்த நபர்கள் காருக்கு தீ வைத்ததும் அங்கிருந்து சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.; இந்நிலையில் இந்து முன்னணி கட்சியின் செயலாளர் காரில் தீவைக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.