இந்துமத கடவுள்களை அவமதித்த தர்மபிரவுக்கு வந்த சிக்கல்!

இந்துமத கடவுள்களை அவமதித்த தர்மபிரவுக்கு வந்த சிக்கல்!

இந்து மத கடவுள்களையும் இந்து மத மரபுகளையும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள தர்ம பிரபு திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் இதுபோன்ற தவறான கருத்துக்களை திரைப்படத்தில் இருந்து நீக்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்ட சென்சார் போர்டு அதிகாரிகளை கண்டித்தும்  நெல்லையில் போராட்டம் நடத்தப்பட்டது. 

dd

எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தர்ம பிரபு, காமெடி நடிகர் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர்  உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமதர்ம ராஜாவாக எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் அவருக்கு எதிராக சில கலகங்களை செய்கிறார். இதனால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்படுகிறார். எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பதை மையமாக கொண்டு கதை எடுக்கப்பட்டுள்ளது. காமெடி கலந்த இந்த மத கதையாக எடுக்கப்பட்ட இந்த படம் இந்து மத கடவுள்களையும் இந்து மத மரபுகளையும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டதாக  நெல்லையில் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள பூர்ணகலா திரையரங்கம் இந்து முன்னணி பேரியக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.