‘இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்’ – சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ

 

‘இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்’  – சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ

பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் ‘இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்’ என ஒரு எம்எல்ஏ ஆவேசமாக பேசினார். இதற்கு அங்கிருந்த இந்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையான சண்டை இந்து-முஸ்லிம் சண்டையாக மாறி இருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளும் உணர்ச்சிபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இப்படி ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார் பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

கைபர் மாகாண சட்டமன்றக் கூட்டம் 

பாகிஸ்தானில் கைபர் மாகாண சட்டமன்றத்தில் 124 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இதில் 99 பேர் பொது (முஸ்லிம்கள்), 22 இடங்கள் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 3 இடங்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

pakistan

இந்நிலையில் கைபர் மாகாண சட்டமன்ற கூட்டம் அண்மையில் நடந்தது. அப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஷர் அஹம் வசீர் புல்வாமா தாக்குதல் விவகாரத்தை குறிப்பிட்டு பேசுகையில், “இந்துக்கள் எல்லாம் நம் எதிரிகள்” என ஆவேசமாக பேசினார். அப்போது அங்கிருந்த இந்து எம்.எல்.ஏ-க்கள் ரவி குமார், ரஞ்சித் சிங், ஆகியார் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மன்னிப்பு கேட்ட எம்.எல்.எ 

இதையடுத்து தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்ட வசீர், நான் இங்கு உள்ள இந்துக்களை குறிப்பிடவில்லை. இந்துஸ்தானில் (இந்தியா) உள்ளவர்களைச் சொல்வதற்காக குறிப்பிட்டேன் என்றார்.

pakistan mla

முன்னதாக இந்த விவகாரத்துக்காக சட்டமன்றத்தில் இந்து எம்.எல்.ஏ-க்கள் ரவிகுமார், ரஞ்சித் சிங்  ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய ரஞ்சித் சிங் , இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் இருப்பதாக உறுப்பினர் வசீர் நினைக்க வேண்டாம் என்றார். மேலும் வசீரினை அப்படி பேச சட்டமன்ற சபாநாயகர் முஸ்டாக் கனி ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.