இந்தி மொழி ஒரு டயப்பர் மொழி – கமல்ஹாசன் அதிரடி

 

இந்தி மொழி ஒரு டயப்பர் மொழி – கமல்ஹாசன் அதிரடி

தமிழிழுடன் ஒப்பிடும்போது இந்தி மொழி ஒரு டயப்பர் மொழி போன்றது என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

தமிழிழுடன் ஒப்பிடும்போது இந்தி மொழி ஒரு டயப்பர் மொழி போன்றது என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “ இந்தி ஒரு நல்ல மொழி தான் ஆனால் அதனை திணிக்கக்கூடாது. தமிழுடன் ஒப்பிடும்போது, இந்தி குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயப்பர் போன்றது. எங்கள் மொழி மீது கைவைத்தால் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம் நடக்கும். எந்த ஷாவும் சுல்தானும் அதை செய்யக்கூடாது.  தமிழ், சமஸ்கிருதம் போன்ற தொண்மை வாய்ந்த மொழிகளுடன் ஒப்பிடும் போது இந்தி டயப்பர் அணியும் சிறு குழந்தை என்று குறிப்பிட்டார். 

Kamalhassan

சென்னையில் பேனர் கலாச்சாரத்தை ஒழித்தாலே நீங்க விரும்பும் பப்ளிசிட்டி உங்களுக்கு கிடைத்துவிடும் மோடி சார். மோடி தமிழை பாராட்டுவது  வாக்குகளுக்காகவே. அந்தந்த ஊருக்கு போகும்போது அந்த ஊர் தொப்பியை மோடி போட்டுக்கொள்வது போலத்தான் அவர் தமிழை பாராட்டுவதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்,