இந்தி தெரிந்தால்தான் வேலை… ஏர் இந்தியா கொடுத்த அதிர்ச்சி!

இந்தி தெரிந்தால்தான் வேலை… ஏர் இந்தியா கொடுத்த அதிர்ச்சி!

விமான நிலையங்களில் கஸ்டம்ர் ஏஜென்ட், கார்கோ சர்வீஸ் உள்ளிட்ட 46 பணிகளுக்கான அறிவிப்பை கடந்த மாதம் ஏர் இந்தியா சர்வீசஸ் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று ஏராளமானோர் திருச்சி செசம்பட்டு நோபர்ட்டன் பள்ளியில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.

air india

இந்த பணியிடங்களுக்கு 10 முதல் இளங்கலை வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் கூட கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமின்றி, வட இந்தியாவிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேர்முகத் தேர்வின்போது ஹிந்தி தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஹிந்தி தெரிந்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால், தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் எல்லா பணியிடங்களிலும் வட இந்தியர்களே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த பணியிடங்களுக்கு இந்தி கட்டாயம் என்று கூறவில்லை. கூடுதல் தகுதியாக மட்டுமே கருதப்படும். எனவே தகுதி, திறமை உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும்” என்றனர்.

air india

தமிழகத்தின் திருச்சி விமானநிலையத்தில் பணியாற்ற இந்தி எதற்கு… வட இந்தியாவில் இருந்து வரும் ஒரு சில பயணிகள் நலனுக்காக வட இந்தியர்களையே வேலைக்கு எடுத்துவிட்டால், இந்த விமான நிலையத்துக்கு வரும் 99 சதவிகித தமிழர்களின் நலன் பற்றி யார்தான் கவலைப்படுவார்கள் என்று தமிழக இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.