இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப் 20 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்! 

இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப் 20 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்! 

பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. 

பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்தவாரம் ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

MK Stalin

இந்நிலையில் திமுக தலைமையில் உயர் நிலை செயல் திட்டக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி திணிப்பை தொடர்ந்து முயற்சித்துவரும் மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே ரேஷன் ஒரே நாடு ஆகிய திட்டத்திற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதில் திமுகவின் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் என தகவல்வெளியாகியுள்ளது.