இந்திரா காந்தியை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்து கொள்ள முடியாது…. சிவ சேனாவுக்கு எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்

 

இந்திரா காந்தியை அவமரியாதை செய்வதை எங்களால் பொறுத்து கொள்ள முடியாது…. சிவ சேனாவுக்கு எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்

எங்க தலைவி மற்றும் லட்சிய பெண்மணியான இந்திரா காந்தியை எந்தவொரு அவமரியாதை செய்வதையும் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது என சிவ சேனாவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

மகாராஷ்டிராவில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரம விரோதிகளாக இருந்த காங்கிரசும், சிவ சேனாவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதேசமயம் இது பொருந்தாத கூட்டணி ரொம்ப நாளைக்கு ஒடாது என விமர்சனமும் எழுந்தது.

சஞ்சய் ரவுத்

அதை உறுதி செய்வது போல் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை, நினைத்த பதவி கிடைக்கவில்லை என கூட்டணிக்குள் புகைச்சல் எழுந்தது. இந்நிலையில், சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராக காந்தி தாதா கரீம் லாலாவை மும்பையில் சந்தித்து பேசினார் என தெரிவித்தார்.

நிதின் ரவுத்

இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நிதின் ரவுத் கூறுகையில், எங்களது தலைவி மற்றும் இலட்சிய பெண்மணியான இந்திரா காந்தியை எந்தவொரு அவமரியாதை செய்வதையும் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது. அவர்களின் முன்னாள் கூட்டணி கட்சி (பா.ஜ.க.) மாதிரி ரவுத் என்ன சொன்னாலும் கேட்டு கொண்டு இருப்போம் என நினைத்தால், நாங்கள் அதனை சகித்து கொள்ள முடியாது என தெரிவித்தார்